சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளரின் வாசஸ்தலத்திலிருந்து 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் காணாமல் போனமை தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊடகப் பேச்சாளரின் உத்தியோகபூர்வ இல்லம் பொரளை மகசீன் சிறைச்சாலை வளாகத்திற்குள் அமைந்துள்ளதுடன், அது சிறைக் கைதிகளால் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல், வீட்டில் இருந்த தங்க நகைகளை சரிபார்க்கவில்லை எனத் தெரிவித்த சிறைச்சாலை பேச்சாளரின் மனைவி, அண்மையில் குறித்த நகைகள் காணாமல் போனதை அறிந்து பொரளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் ஊடகப் பேச்சாளரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பெருமளவிலான கைதிகள் சுத்தப்படுத்தியுள்ளனர்.
எனவே, இது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.