களனி பல்கலைக்கழகத்தில் நேற்று (08) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 06 மாணவர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
மஹர நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தபட்ட போதே பிணை வழங்கப்பட்டது.
தலா 50,000 ரூபா பெறுமதியான சரீர பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கலஹா சந்தியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்களை ஒடுக்க முயற்சிக்கின்றமை, முறையற்ற வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் ஒரு ஒழுங்கையை மறித்து மாணவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர். பின்னர் பொலிஸாரால் வீதி மூடப்பட்டது.