Our Feeds


Wednesday, March 29, 2023

News Editor

மஹரகம களஞ்சியத்திலிருந்து 64 ஆயிரம் லீற்றர் எரிபொருள் மாயம்


 மஹரகம களஞ்சியத்தில் கடந்த வருடம் சேமித்து வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயமாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வருட இறுதி வரையான காலப்பகுதியில் இந்த எரிபொருள் மாயமாகியுள்ளதாகவும், இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு இரண்டு இலட்சத்து எழுபது இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


வருட இறுதிக் கணக்கீட்டின் போது இது தெரியவந்துள்ளதுடன், இது தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக, போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி) மங்கள ஜயதிலக்க, கணக்காளர்கள் அடங்கிய 17 பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »