Our Feeds


Monday, March 27, 2023

Anonymous

நாளை ஒரே வரிசையில் தோன்றவுள்ள 5 கிரகங்கள் - விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

 



இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று வானியல் விஞ்ஞானிகள் கேட்கின்றனர்?அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா? செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன. 


இந்த வாரத்தில், அதிலும் குறிப்பாக நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) இந்த கிரக வரிசையைக் காண முடியும். 


அவ்வாறு காண விரும்புவோர், சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் குறிப்பிட்டுள்ளார். 


இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும். ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும், 'ஒரே நேரத்தில் 5 கிரக தரிசனம்' தவறிவிடும். 


ஆம், சூரியன் மறைந்த அரைமணி நேரத்திலேயே, புதனும், வியாழனும் தொடுவானத்துக்கு கீழே புதைந்துவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


வானம் தெளிவாக இருக்கும் நிலையில், மேற்குப்புறத்தை நன்றாக காணமுடியும் சூழலில் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »