நாகொடை மாபலகம, கட்டகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், காயமடைந்தவர்களில் மூவர் ஆபத்தான நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் நால்வர் தவலம அலைஹல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றும் ஒருவர் மாபலகம அலுஹிதஹல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர்கள் 21, 27, 32, 34, 24 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டள்ளது.
வீடொன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வீடு ஒன்று தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.