இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் கவனிப்பு இன்மை மற்றும் ஒழுங்கான பராமரிப்பு இன்மையால் உயிரிழப்பதாக புதிய அறிக்கை ஒன்றின் மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையை ஏஜ் யுகே என்ற தொண்டு நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021-2022 ஆம் ஆண்டில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,890 பேர் எந்த கவனிப்பும் கிடைக்காமல் முதியோர்கள் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையில் ஒவ்வொரு வாரமும் 500க்கும் மேற்பட்ட முதியவர்கள் கவனிப்பின்றி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.