கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் நுழைந்து தாக்குதல் நடத்திய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நேற்று (30) பிற்பகல் திடீரென நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் தொடர்புபட்டுள்ளதுடன், ஏனைய இருவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)