இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்க மேலும் நான்கு நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஹங்கேரி, குவைத் ஆகிய நாடுகள் இலங்கை சார்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி உத்தரவாதம் வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி இது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்கிய இந்தியா, பெரிஸ் மற்றும் சீனாவுக்கு மீண்டும் ஒருமுறை அவர் நன்றி தெரிவித்துள்ளார்.