Our Feeds


Sunday, March 12, 2023

ShortNews Admin

இந்தியாவின் உதவியால் 45 வீதமான மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் தயார்



இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


இந்த ஆண்டுக்கு தேவையான மொத்த பாடப்புத்தகங்களில் பாதியை அச்சிட முடிந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஆண்டு, இலங்கை நிதி நெருக்கடியை எதிர்கொள்ள இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித் தொகையாக வழங்கியது.

இதன்மூலம் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான காகிதம் மற்றும் மூலப்பொருட்களை பெறுவதற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி தொகையில் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் உள்ள 40 இலட்சம் பாடசாலை மாணவர்களில் சுமார் 45 வீதமான மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு இந்த மானியம் உதவியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »