ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான தெரிவித்துள்ளார்.
இந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு மார்க்கங்களின் ஊடாக ஜனாதிபதிக்கு தமது இணக்கத்தை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதிக்கு இணக்கம் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னிடம் தனிப்பட்ட ரீதியில் இதனை கூறியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக குறுகிய காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைவார்கள் எனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமான நம்பிக்கை வெளியிட்டார்.