Our Feeds


Thursday, March 2, 2023

Anonymous

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திலிருந்து செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய 4 பேர் இராஜினாமா!

 



இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தற்போதைய நிர்வாக சபையில் இருந்து 4 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.


முதலில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் இந்திக்க தேனுவர தனது இராஜினாமா கடிதத்தை அதன் தலைவர் ஶ்ரீ ரங்காவிற்கு அனுப்பியுள்ளார்.


கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர்களான சி. தீபிகா குமாரி மற்றும் சமன் தில்ஹான் நாகஹவத்த ஆகியோரும் தமது இராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்துள்ளனர்.


மேலும், கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொருளாளர் டி. சுதாகரும் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று சபையின் பெரும்பான்மையானவர்கள் இராஜினாமா செய்ததன் காரணமாக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


நிர்வாக சபை உறுப்பினர்களின் பதவி விலகல் காரணமாக கோரம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இதனால் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் செயற்பாடுகளை பேண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


கால்பந்து சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆக இருந்தாலும், ஜனவரி 14 அன்று 8 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். குறைந்தபட்ச கோரத்தை பராமரிக்க ஆறு நிர்வாக உறுப்பினர்கள் தேவை, மேலும் 4 உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால், இப்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இன்றும் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய நிர்வாகத்திடம் முறையான செயல் திட்டம் உள்ளது.


சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஜனவரி 21 முதல் இலங்கைக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »