Our Feeds


Thursday, March 9, 2023

ShortNews Admin

4 வருடங்களாக குளிக்காமல், முடி வெட்டாமல் காட்டில் வாழ்ந்த LTTE முன்னாள் உறுப்பினர் - நடந்தது என்ன?



மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேசத்துக்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுயிலிருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்று புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினரான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்திற்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

 

இது தொடர்பாக தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் LTTE இயக்கத்தில் அவருடன் பயணித்த முன்னாள் உறுப்பினர்கள் அவரை அணுகிய போது இவர்களைக் கண்டதும் பாலா கட்டுப் பகுதிக்குள் மறைந்து கொண்டுள்ளார்.

 

இவ்வாறான நிலையில் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்து வந்த பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவகர். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன், பாலாவை மடக்கிபிடித்து சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

பாலா கடந்த 4 வருட காலமாக காட்டிலுள்ள பழங்களை உட்கொண்டு, குளிக்காமல், முடிவெட்டாமல், வாழ்ந்து வந்துள்ளார். அவருக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாக ஜனநாயக் போராளிகள் கட்சி மட்டுமாவட்ட இணைப்பாளர் நகுலேஸ் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »