Our Feeds


Monday, March 27, 2023

SHAHNI RAMEES

3 தேர்தல்களையும் ஒன்றாக நடத்துங்கள்...!

 



ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித்

தேர்தல் ஆகிய மூன்றையும் ஒன்றாகவே நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்தார்.


இது தனது தனிப்பட்ட ஆலோசனை என்றும் அவர் குறிப்பிட்டார்.



உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 8000இலிருந்து 4000 ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அது சட்டமூலமாக சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்த நவின் திஸாநாயக்க, அந்த தீர்மானத்தின் மூலம் பெருமளவு பணத்தை சேமிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »