நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் 3 ஆவது அலகு செயலிழந்துள்ளது என்று இலங்கை மின்சார சபை தமக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இதன்காரணமாக மின்வெட்டு அமுலாகாது என்றும் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் பாரிய பழுதுபார்க்கும் பணிக்கு உட்படுத்தப்பட இருந்த 3ஆம் அலகே செயலழிந்துள்ளதாகவும் தொடர் மின் விநியோகத்தை உறுதி செய்ய, மின்சார சபையின் டீசல் மற்றும் ஏனைய எரிபொருள் மின்நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்றார்.