Our Feeds


Sunday, March 5, 2023

ShortNews Admin

பாராளுமன்றத்தில் உணவுக்கான செலவு 30 சதவீதத்தால் அதிகரிப்பு!



மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாராளுமன்றத்தில் உணவுக்கான செலவு 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பாராளுமன்ற தகவல் தெரிவிக்கின்றன.

 

பாராளுமன்றத்தில் உணவுக்காக மாதாந்தம் சுமார் 90 இலட்சம் செலவிடப்பட்டதாகவும் அது தற்போது ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இவற்றில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு மற்றும் பானங்களுக்காக செலவிடப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

 

பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் பாராளுமன்றம் கூடும் நாட்களில் மட்டுமே உணவை எடுத்துக்கொள்கிறார்கள். பெரும்பாலும் இது ஒரு மாதத்தில் 8 நாட்கள் ஆகும்.

 

மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உணவகத்தில் உணவு உண்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

 

எனினும். பாராளுமன்ற ஊழியர்கள் மாதம் முழுவதும் (வேலை நாட்களில்) சலுகை விலையில் பாராளுமன்றத்தில் இருந்து உணவை பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் விரயமாக்கப்படும் வீதம் அதிகரித்துள்ளதாகவும், உணவுப் பொருட்களை வெளியேற்றும் வீதமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாகவும் பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

பாராளுமன்றத்தில் ஏறக்குறைய 2000 பணியாளர்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

 

இதேவேளை, பாராளுமன்றத்தின் உணவுச் செலவுகளை, பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுச் செலவு என்று மாத்திரம் குறிப்பிடுவது தவறானது என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எரிவாயு மற்றும் மின்சாரத்தின் விலை பாரியளவு அதிகரிப்பு காரணமாக பாராளுமன்றத்தில் உணவு வழங்குவதற்கான செலவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »