எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி முதலாம் தரத்தின் அனைத்து வகுப்புக்களிலும் ஆங்கிலம் பேசும் முறை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் காலங்களில் 6-9 மற்றும் 10-13 வரையிலான அனைத்து பாடசாலை பாடத்திட்டங்களையும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வர தேவையான மேம்படுத்தல்கள் செய்யப்பட்டு அடுத்த மாதம் முன்னோடி திட்டம் தொடங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தகவல் தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவு பாடத்தையும் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான பாட மேம்பாடு மற்றும் வளங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கல்வியமைச்சர் இதன்போது தெரிவித்தார்.