Our Feeds


Monday, March 6, 2023

ShortNews Admin

மருந்து வாங்க பணம் இல்லை - அங்கவீனமான 2 மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய்! - நடந்தது என்ன?



கெபிடிகொல்லாவ – கனுகஹவெவ பிரதேசத்தில் தாயொருவர் தனது இரண்டு அங்கவீனமான மகன்களுடன் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் நேற்று (05) வீட்டின் கிணற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இச்சம்பவத்தில் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாயுடன் மற்றைய மகனும் கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


கெபிடிகொல்லாவ கனுகஹவெவ பிரதேசத்தை சேர்ந்த சுனில் சாந்தகே ரவிது மிஹிரங்க என்ற 21 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த இளைஞரின் 48 வயதுடைய தாயும் 9 வயது சிறுவனும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சம்பவத்தில் உயிரிழந்த 21 வயதுடைய இளைஞன் ஊனமுற்றவர். அவரது சகோதரர் காது கேளாதவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


பொருளாதார நெருக்கடி காரணமாக தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் இந்த பெண்ணுக்கு இரண்டு மாற்றுத்திறனாளி மகன்களின் சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பிள்ளைகளின் தந்தை இன்று (05) அதிகாலை கடமைக்குச் சென்ற பின்னர், காலை 10 மணியளவில் காலை உணவுக்கு வீடு திரும்பியபோது, ​​வீட்டில் மனைவி மற்றும் இரு மகன்களை காணாததால், கிணற்றில் மனைவி மற்றும் இரு மகன்களும் கிடப்பதைக் கண்டதாக விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »