பங்காளதேஷில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தையடுத்து 2 ஆயிரம் வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன. 12 ஆயிரம் பேர் வீடுகளின்றி தவித்து வருகின்றனர்.
பங்காளதேஷில் மியான்மரில் இருந்து வெளியேறிய லட்சக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள், பங்காளதேஷின் காக்ஸ் பஜார் நகரில் உள்ள மிகப்பெரிய முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த முகாமில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சமடைந்த அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
தீ முகாம் முழுவதும் பரவியது. இதில் 3 ஆயிரம் வீடுகளும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும் தீக்கிரையாகின.
குறித்த விபத்தில் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.