Our Feeds


Thursday, March 16, 2023

News Editor

இந்தோனேஷியாவில் தொடர் மழை : நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி


 இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் அதன் தலைநகரான ஜகார்த்தா அருகே உள்ள போகோர் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 


இதில் பலர் தங்களது வீடுகள், உடைமைகளை இழந்தனர். மேலும் பல மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 


இதனால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணி மற்றும் நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 


இந்த நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேரை காணாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகின்றது. 

இதனால் அங்கு மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »