நடப்பாண்டில் 260 பேர் பொலிஸ் சேவையில் இருந்து அறிவித்தல் வழங்காமல் விலகியுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட்கள் என குறித்த தகவல்கள் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சினைகள், பணிச்சுமை மற்றும் ஓய்வின்மை போன்ற காரணங்களால் குறித்த பொலிஸார் சேவையை விட்டு விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் பொலிஸ் சேவையிலிருந்து சட்டரீதியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டில் மாத்திரம் 900 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.