Our Feeds


Thursday, March 30, 2023

ShortNews Admin

நஷ்டத்தில் அரச தொலைக்காட்சி - தானாக முன்வந்து பதவி விலகுவோருக்கு 25 லட்சம் வரை நஷ்டஈடு!



தானாக முன்வந்து பதவி விலக விரும்பும் தேசிய தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக பேணுவதற்கான சவாலை எதிர்கொள்ளவே இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கழகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

தானாக முன்வந்து வெளியேறும் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சமும், குறைந்தபட்சம் ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும்.

எவ்வாறாயினும், இந்த முன்மொழிவை எதிர்க்கும் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகள், முகாமையாளர்கள் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி விற்பனை செய்ய முயற்சிக்கின்றதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »