Our Feeds


Wednesday, March 1, 2023

SHAHNI RAMEES

2022 இல் இணையச்சேவையை அதிகம் துண்டித்த நாடு - சர்வதேச அமைப்பு அறிக்கை...!

 

2022 இல் இந்தியாவே உலகில் இணைய சேவையை  அதிகளவு துண்டித்துள்ளது என  இணைய பரப்புரை கண்காணிப்பு அமைப்பான அக்சஸ் நவ் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது வருடமாக இந்தியா இந்த விடயத்தில் முதலிடம் வகிக்கின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சர்வதேச அளவில் கண்காணிக்கப்பட்ட 187இணையசேவை துண்டிப்புகளில் 84 இந்தியாவிலேயே இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள நியுயோக்கை தளமாக கொண்ட அக்சஸ் நவ் காஸ்மீரில் 49 தடவைகள் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளது.

அரசியல் ஸ்திரதன்மையின்மை மற்றும் வன்முறைகள் காரணமாக அதிகாரிகள்  அதிகாரிகள் காஸ்மீரில் 49 தடவைகள்இணையசேவையை துண்டித்தனர்.ஜனவரி முதல் பெப்ரவரி வரை மூன்று நாட்கள்16 தடவைகள் இணையச்சேவையை துண்டித்தனர் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

2022 இல் இணையசேவைகள் அதிகளவு துண்டிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் உக்ரைன் இரண்டாவதாக  காணப்படுகி;ன்றது.

ரஸ்யாவின் படையெடுப்பின் பின்னர் 22 தடவைகள் உக்ரைனில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ரஸ்யாவின்  முழுமையான படையெடுப்பின் போது ரஸ்ய படையினர் 22 தடவைகள் உக்ரைனில் இணையசேவைகளை  துண்டித்தனர் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஸ்ய படையினர் சைபர் தாக்குதல்களை மேற்கொண்டதுடன்  தொலைதொடர்பு வசதிகளை சேதப்படுத்தினர் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

ஈரானில் கடந்த வருடம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்த பின்னர் 22 தடவை இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »