பேரிச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டுவரும் விசேட இறக்குமதி வரியான ரூ.200 ஐ குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒரு கிலோ பேரிச்சம்பழத்திற்கு விசேட இறக்குமதி வரியாக 200 ரூபாய் விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மார்ச் 8 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேரிச்சம்பழத்திற்கு விசேட இறக்குமதி வரியாக 1 ரூபாய் மட்டுமே விதிக்கப்பட உள்ளது.
வரவிருக்கும் ரமலான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களுக்கு நிவாரண நடவடிக்கையாக இந்த 199 ரூபா வரி குறைக்கப்பட்டுள்ளது.