Our Feeds


Sunday, March 19, 2023

ShortNews Admin

சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு 2 மாதத்தில் 3500 பேர் வெளியேறியுள்ளனர் - அதிர்ச்சி ரிப்போட்!



நடப்பாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் ஆயுதப்படையின் இருபத்தைந்து அதிகாரிகள் உட்பட மூவாயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

அந்த வகையில், பெப்ரவரி மாதத்தில் மாத்திரம், பத்து அதிகாரிகள் உட்பட சுமார் 1,500 ஆயுதப் படை வீரர்கள் வெளியேறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

பிரிகேடியர் உட்பட பதின்மூன்று அதிகாரிகள் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு சென்று இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

இதன் காரணமாக புதிய கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கும் கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதற்கும் முப்படைகளின் தளபதிகளின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு குடிவரவு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.

 

தற்போது நிலவும் பொருளாதார சிரமங்களினால் கடனை செலுத்த முடியாத நிலை, அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு உள்ள வசதிகள் குறைப்பு போன்ற காரணங்களால் இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »