ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சிக்கிறார்கள். அவர்கள் கடல் வழியாக படகுகளில் செல்கிறார்கள்.
வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல் மார்க்கமாக படகில் அகதிகள் சென்றுள்ளனர்.அப்போது அந்த படகு துனிசியா கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 19 அகதிகள் உயிரிழந்துள்ளனர் என்று மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.