அல்லைப்பிட்டி பிரதான வீதியில் உள்ள ஆலமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
புத்தகப் பை முதுலில் தொங்கவிட்ட படி, குறித்த இளைஞன் தூக்கில் தொங்கியுள்ளார். உயிரிழந்தவர் பழைய பூங்காவீதி யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் என ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்வி நிலையம் ஒன்றுக்கு சென்று விட்டு குறித்த இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்வதற்காக அல்லைப்பிட்டி பகுதிக்கு வந்திருக்கலாமென சந்தேகம் தெரிவிப்பட்டுள்ளது.