கண்டி-மஹியங்கனை 18 வளைவு வீதியின் இரண்டாவது வளைவு பகுதியில் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்துள்ளதால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதிகளில் பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.