2023ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஆடை ஏற்றுமதி 18.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆடை ஏற்றுமதியின் ஊடாக கடந்த வருடத்தில் இந்த காலப்பகுதியில் 478.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டிருந்தது.
எனினும், பொருளாதார மந்தநிலை காரணமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி 8.7 சதவீதமாக குறைவடைந்தது.
இதன்படி, இந்த வருடத்தில் ஆடை ஏற்றுமதியின் ஊடாக, 388.9 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.