அதிகரிக்கப்பட்டுள்ள வரி அறவீடு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்னிலைப்படுத்தி, ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, எதிர்வரும் 14ம் திகதி நள்ளிரவு முதல் 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் எஸ்.பீ.விதானகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு, ரயில்வே திணைக்களத்திலுள்ள 29 தொழிற்சங்கங்கள் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.