நாட்டில் 130 ஆயர்வேத மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச ஆயுர்வேத வைத்தியர் அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் ஆயுர்வேத வைத்தியர் பீ. ஹேவகே இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத மருந்துகளை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களில் நிலவும் தட்டுப்பாடே இதற்கு காரணமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சில ஆயுர்வேத மருந்துகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இருப்பினும், அவற்றை இறக்குமதி செய்வதில் வழங்குநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளினால் மூலப்பொருட்களின் இறக்குமதி தடைப்பட்டுள்ளதாக அரச ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஆயுர்வேத வைத்தியர் பீ.ஹேவகே தெரிவித்துள்ளார்.