இலங்கை பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு 10,000 வேலை வாய்ப்பு ஒதுக்கீட்டை மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கத்தால் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட 10,000 வேலைவாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்த ஒதுக்கீடு கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாகவே புதிய வேலைவாய்ப்பு ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
எதிர்காலத்தில் மாதாந்தம் ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு பணவனுப்பல் இலக்கை நோக்கி பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.