நாட்டில் ஒரேநாளில் தங்க விலை 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
இன்று கொழும்பு செட்டியார்த் தெருவில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் விலை 165,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 150,000 ரூபாவாகவும் நிலவுகிறது.
டொலர் விலை மேலும் குறையுமாக இருந்தால் தங்கத்தின் விலையும் மேலும் குறையும் என்று தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.