100 முதல் 150 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த நான்கு மாதங்களுக்குள் நீக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இது மாற்று விகிதங்கள், அந்நிய கையிருப்பு அல்லது பணவீக்கத்தை எதிர்மறையாக பாதிக்கவில்லை என்றால் மட்டுமே ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினிகள், கையடக்கத் தொலைப்பேசிகள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற மின்னணு சாதனங்கள், அத்துடன் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுதுபொருட்கள், உணவு, ஆடைப் பொருட்கள், தோல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், உதிரி பாகங்கள், மூலப்பொருட்கள் போன்றவற்றின் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதேவேளை விவசாய உபகரணங்கள், குளியலறை சாதனங்கள் மற்றும் பீங்கான் ஓடுகள் ஆகியவற்றின் மீதான தடையும் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.