5 ஆண் மாணவர்களையும் 5 பெண் மாணவர்களையும் பாடசாலை விடுதிக்குள் வைத்து கடுமையாக தாக்கினர் என்ற குற்றச்சாட்டில் கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் நான்கு ஆசிரியர்கள் மற்றும் இரண்டு விடுதி காப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுக்காற்று பிரச்சினை காரணமாகவே 10 மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட குறித்த குழுவினர் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, மார்ச் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்டி சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் மாணவர்கள் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன்,
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.