தென்கொரியாவைப் பொறுத்தமட்டில் 18 முதல் 28 வயதிற்குட்பட்ட ஆண்கள் கட்டாயம் 18 அல்லது 21 மாதங்கள் இராணுவ சேவை ஆற்ற வேண்டும்.
ஆனால், புதிய விதி முறைகளின் படி சில ஆண்களுக்கு மட்டும் அதில் விலக்கு அளிக்கபட்டுள்ளது.
அதாவது 30 வயதிற்குள்ளாகவே 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையானால் அவர்களுக்கு இந்த கட்டாய இராணுவ சேவை விதி அவசியமில்லை என தென்கொரியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
தென்கொரிய மக்கள் தொகையை அதிகப்படுத்தும் முயற்சியாக இது பார்க்கப்படுகின்றது.