Our Feeds


Monday, February 13, 2023

ShortNews Admin

VIDEO: தலதா மாளிகையின் தங்கங்கள் விற்ற பணம் மஹிந்தவிடமா? - வெடித்தது அடுத்த சர்சை!



மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையில் இருந்து தங்கங்களை எவ்வாறு திருடினார் என தலதா மாளிகையின் முன்னாள் பூசாரி ஒருவர் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவரது வீட்டுக்கு சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“இது தலதா மாளிகைக்குரியவை. 50 கோடிக்கு தங்கங்களை விற்றோம். ஒன்பது கோடி இருபத்தெட்டு இலட்சத்து எழுபதாயிரத்திற்கு இடங்கள் விற்கப்பட்டது. அவை அனைத்துமே அலறி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தான் உண்மை. நான் தான் பணத்தினை எண்ணி கட்டுக் கட்டாகக் கட்டினேன். அதனை மஹிந்தவிடம் கொண்டு போனது டிலந்த.. என்னை வாகனத்தில் இருக்க சொல்லி விட்டு பணத்தினை கொண்டு சென்றார்கள்.

தலதா மாளிகைக்கு ஒரு நாளைக்கு 20 -25 இலட்சம் வருவாய். நான் மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுக்கு கூறியுள்ளேன். அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது உக்கும் பபாக்கள்.. நான் நாட்டுக்கு நாட்டு மக்களுக்கு பிள்ளைகளுக்கு எனது பேரப் பிள்ளைகளுக்கு நாடு ஒன்றினை உருவாக்க வேண்டும். நான் மிகவும் வேதனையில் உள்ளேன். தலதா மாளிகையில் இடம்பெறும் களவுகளுக்கு எதிராக நான் வழக்குப் பதிவு செய்தேன். அவை அனைத்தும் வீணாப் போனது..”

DC

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »