Our Feeds


Wednesday, February 15, 2023

SHAHNI RAMEES

#Update: துருக்கி-சிரியா நிலநடுக்கம் : 41 ஆயிரத்தை எட்டிய பலி எண்ணிக்கை

 


துருக்கி மற்றும் சிரியா நாடுகளில், நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வார காலம் ஆன பின்னும், தெற்கு துருக்கியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நபர்களின் குரல் இன்னும் கேட்பதாக மீட்பு குழுவினர் கூறுகின்றனர்.



தொடர்ச்சியாக 100-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் மொத்த உயிரிழப்பு 41 ஆயிரம் எட்டியுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.



இதனால், இன்னும் பலரை மீட்க கூடிய சாத்தியம் உள்ளது என்ற நம்பிக்கை லேசாக ஒளிர்கிறது. நேற்று இடிபாடுகளில் இருந்து 9 பேர் மீட்கப்பட்டனர்.



இந்நிலையில், உதவி குழுவினரின் பார்வையானது தற்போது, புகலிடம் அல்லது போதிய உணவு இன்றி கடும் குளிரில் போராடுவோரின் பக்கம் திரும்பியுள்ளது என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.



இதுபற்றி ஒரு வார கால மீட்பு பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான சலாம் ஆல்தீன் கூறும்போது, எனது வாழ்க்கையில் இதுபோன்ற மரண சம்பங்களை பார்த்ததே இல்லை. நிறைய சடலங்களை மீட்டுள்ளதாக அழுதபடி கூறினார். திரைப்படத்தில் வரும் காட்சிகள் போன்று சூழ்நிலை உள்ளது. மொத்த நகரமும் மரணமடைந்தவர்களின் வாடை அடிக்கிறது என கூறியுள்ளார்.



200 மணிநேரத்திற்கு பின்னர் இடிபாடுகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்ட சம்பவங்களும் காணப்படுகின்றன. இதனால், இன்னும் மக்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியம் எழுகிறது. அவர்களை தேடி கண்டறிய வேண்டும் என்று மீட்பு பணியாளர் ஒருவர் கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »