\
கொக்கட்டிச்சோலை களுகுந்தான்வெளி, கங்காணியார்குளத்தில் இன்று குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மண்டூரை சேர்ந்த இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். தோணியில் சென்று கொண்டிருந்த போது, தோணி கவிழ்ந்ததில் அவர்கள் ஆற்றில் மூழ்கி, சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவன். ஏனைய மூவரும் பாடசாலை மாணவர்களாவர்.