தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோளில் 7.8 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், அதிக அளவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் இடிந்த கட்டிடங்களுக்கு அடியில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.