மக்களை கொன்று அரச சொத்துக்களை அழித்த மக்கள் விடுதலை முன்னணிக்கு தேர்தலில் போட்டியிட முடியுமானால், அகிம்சை அரசியல் கட்சியான தமது கட்சிக்கு போட்டியிட நூறு மடங்கு உரிமை உண்டு என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி மிக சுத்தமான கட்சி என சிலர் நம்பினாலும் அது உண்மையல்ல என தெரிவித்த அமைச்சர், ஜே.வி.பி.யுடன் தொடர்புடையவர்களே மே 9 ஆம் திகதி இந்த சம்பவத்தை முன்னெடுத்தனர் எனவும் தெரிவித்தார்.
குருநாகல் மற்றும் சிலாபம் பிரதேசங்களில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.