பாராளுமன்றத்தை ஒத்திவைத்து முட்டாள்தனமான செயல்களை செய்யும் அரசாங்கங்கள் உலகில் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சி நிரல்களில் செயற்பட்டு நாட்டை பாதாளத்திற்கு இட்டுச் செல்வதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த முட்டாள்தனத்தை அரசாங்கம் இனியாவது நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.