பாகிஸ்தான் கடற்படை நடத்தும் சர்வதேச கடற்படைப் பயிற்சியான AMAN இல் பங்கேற்பதற்காக SLNS சமுதுரா கொழும்பில் இருந்து கராச்சி துறைமுகத்தை நோக்கிய பயணத்தை நேற்று ஆரம்பித்தது.
கடற்படைத் தளபதியின் பணிப்புரையின் பேரில், இந்த கப்பல் இலங்கை கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘AMAN’ 08 ஆவது பதிப்பில் பங்குகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பயிற்சியானது ‘அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ஒன்றாக’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன்,இது பெப்ரவரி 10 முதல் 14 வரை கராச்சியில் நடைபெறவுள்ளது.