பலர் உள்ளே புகுந்து அலுவலகத்தில் இருந்த விளம்பர பலகைகளை கடுமையாக சேதப்படுத்தியதாக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டி அலுவலகங்களை அழிப்பதற்காக குழுக்களை களமிறக்குவதன் மூலம் ஜனாதிபதி புதிய கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் முஜிபர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மாளிகையை எரித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.