தொழுநோய் வாரத்தினை முன்னிட்டு பிறைந்துரைச்சேனை மொகிதீன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் கொண்டு சொல்லும் நோக்கில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு (03.02.2023) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வித்தியாலய பிரதான மண்டபத்தில் மொகிதீன் சனசமூக நிலையத்தின் தலைவர் ஏ.ஜி.அஸ்லம் தலைமையில் இடம்பெற்றது.
இதில், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஏ.எல்.நஸீர் “தொழுநோயின் அறிகுறி பற்றியும் அதன் தாக்கம்” தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபை சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹாரூன், சனசமுக நிலையத்தின் செயலாளர் எஸ்.ஐ.எம்.நிப்ராஸ், அஸ்பக் அகடமியின் தலைவர் ஏ.எல்.எம்.இர்பான், சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அண்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோய் என்று அழைக்கப்படும் குஷ்டரோகத்தின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுவதாகவும் வளவாளராக கலந்து கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார். இதனை கட்டுப்படுத்த பல்வேறுபட்ட வேலை திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். பாடசாலை மாணவர்கள் மத்தியில் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டிருந்தால் அதனை எவ்வாறு அடையாளம் காண்பது இந்நோய் ஒருவரிடம் இருந்து எவ்வாறு மற்றொருவருக்கு பரவுகின்றது என்ற பல்வேறுபட்டு விளக்கங்களை இந்நிகழ்வின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.