எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு இன்றைய தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.கலையரசன், இரா.சாணக்கியன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, வலிபர் முன்னணி துணைச்செயலாளர் நிதான்சன், ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது பிரதேசசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நியமிக்கப்பட்ட வட்டார, பட்டியல் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, அதிதிகளால் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.