இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, இந்திய அரசாங்கம் 500 பேருந்துகளை இலங்கைக்கு இன்று (05) வழங்கியது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பேருந்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாவை வெட்டி, பெற்றுக்கொண்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் இதில் பங்கேற்று, பேருந்துகளுக்கான திறப்புகளை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.