தேசிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டதில் 28 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ்மா அதிபருக்கு (ஐஜிபி) அறிவித்துள்ளது.
மின் கட்டண அதிகரிப்பு, புதிய வரிக்கொள்கை, தேர்தல் பிற்போடப்பட்டமை ஆகியவற்றுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (27) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சில வீதிகளுக்குள் நுழைய நீதிமன்றங்கள் தடையுத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இப்பாங்வெல சந்தியை சென்றடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதில் காயமடைந்த 28 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மரணமடைந்ததை அடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கோரியது.