ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்தில் அக்கரபத்தனை பிரதேச சபையின் பிரதான வேட்பாளராக நிபந்தனையின்றி வழங்கிய தொழிற்சங்க ஆதரவை இன்று (08) முதல் உத்தியோகபூர்வமாக நீக்கிக்கொள்வதாக “தேயிலை எம் தேசம்” அமைப்பின் தலைவர் பெரியண்ணன் கணபதி ரவி தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இன்று தொடக்கம் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் திகாம்பரம் எம்.பின் ஜனநாயக ரீதியிலான பயணத்திற்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.