மலையகம் பற்றிய உலக அவதானத்தை முன்னெடுக்கும் நோக்கில், மனோ கணேசன் எம்.பி தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினரை, நுவரெலியாவுக்கு பயணம் செய்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி செங் தலைமையிலான குழுவினர் சந்தித்துள்ளனர்.
அமெரிக்க தூதுவர் குழுவில், அரசியல் துறை பொறுப்பாளர் ரூபி வுட்சைட், US AID துணை பணிப்பாளர் டிம்மோதி மேவ்லின், ஆகியோரும் அடங்குகின்றனர்.
த.மு.கூ வின் குறித்த சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், மயில்வாகனம் உதயகுமார் எம்.பி மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.