பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள், பொத்துவில், நிந்தவூர், கல்முனை வடக்கு (உப பிரதேச செயலகம்), கல்முனை, நாவிதன்வெளி மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச செயலகங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் ஜனாதிபதி அதிமேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களால் ஒப்பமிடப்பட்ட பதவிக்கான நியமனக் கடிதத்தை, இன்று (23.02.2023) இலங்கையின் பிரதமர் கெளரவ. தினேஷ் குணவர்தனவிடமிருந்து பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் பெற்றுக் கொண்டார்.